இந்திய மகளிரணி படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா என்பது குறித்து...

DIN

அயர்லாந்துக்கு எதிராக இந்திய மகளிரணியின் ஆதிக்கம் தொடருமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அயர்லாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடர் நாளை (ஜனவரி 10) முதல் தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வென்ற இந்திய அணி மிகுந்த வலுவாக உள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அணியை வழிநடத்திய நிலையில், அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வேகப் பந்துவீச்சாளர் ரேணுகா சிங்குக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியை ஸ்மிருதி மந்தனா கேப்டனாக வழிநடத்தவுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பேட்டிங்கில் அசத்திய அவர், தற்போது அணியை கேப்டனாக வழிநடத்தவுள்ளார். அணியின் துணைக் கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அனைத்துப் போட்டிகளிலுமே இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின்போது, 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அயர்லாந்தை வீழ்த்தியது. அயர்லாந்துக்கு எதிரான இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு வரி; ஆனால் சீனாவுக்கு இல்லை! அமெரிக்கா விளக்கம்!

ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் 8 சதவிகிதம் உயர்வு!

அமெரிக்கா: டிரக் - கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி! இந்தியர் மீது கடும் விமர்சனம்!

உக்ரைன் போருக்கு முடிவு? அமெரிக்க, ஐரோப்பிய, உக்ரைன் தலைவர்கள் இன்று நள்ளிரவில் சந்திப்பு!

மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!

SCROLL FOR NEXT