ஜோஸ் பட்லர் படம் | AP
கிரிக்கெட்

தோல்விக்கு காரணம் என்ன? விளக்கமளித்த ஜோஸ் பட்லர்!

இங்கிலாந்து அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.

DIN

இங்கிலாந்து அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்று (ஜனவரி 22) தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

ஜோஸ் பட்லர் விளக்கம்

அணியின் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் தரமான சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிராக நாங்கள் எப்படி விளையாட வேண்டும் என நினைத்தோமோ, அதனை எங்களால் செயல்படுத்த முடியவில்லை. இந்திய அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசினார்கள். இங்கிலாந்து அணியில் உள்ள சில வீரர்கள் முதல் முறையாக இந்திய அணியின் சில பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுகிறார்கள்.

அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள். இந்திய அணிக்கு எதிராக நிறைய சுழற்பந்துவீச்சில் அவர்கள் விளையாட இருக்கிறார்கள். இந்திய அணி எப்போதும் மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கிறேன். இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் வழியை இங்கிலாந்து அணி கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 25) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT