(கோப்புப்படம்) 
கிரிக்கெட்

லாகூரில் பிப்.16-ல் சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழா!

சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழாவை பிப்ரவரி 16 அன்று லாகூரில் நடத்த பிசிபி மற்றும் ஐசிசி திட்டமிட்டுள்ளன.

DIN

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் இணைந்து சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடக்க விழாவை பிப்ரவரி 16 அன்று லாகூரில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன.

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்லாத இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது.

இதையும் படிக்க | விராட் கோலியைக் காணக் குவிந்த ரசிகர்கள்! நிரம்பி வழிந்த அருண் ஜேட்லி திடல்!

பிப்ரவரி 19 ஆம் தேதி நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி கராச்சி மைதானத்தில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக தொடக்க விழாவை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 7 ஆம் தேதி புதுப்பிக்கப்பட்டுள்ள கடாபி மைதானத்தை பிசிபி அதிகாரப்பூர்வமாக திறக்கவிருக்கிறது. இதற்காக பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். மேலும், பிப்ரவரி 11 ஆம் தேதி, கராச்சியில் புதுப்பிக்கப்பட்ட தேசிய மைதான திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க |இங்கிலாந்து - ஆஸி. டெஸ்ட்: 170 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

கேப்டன்களின் செய்தியாளர் சந்திப்பு மற்றும் போட்டோஷூட் ஆகியவை பிப்ரவரி 16-ம் தேதி லாகூரில் நடைபெறவிருக்கிறது.

வரலாற்று சிறப்பு மிக்க லாகூர் கோட்டையில் உள்ள ஹுசூரி பாக் என்ற இடத்தில் திறப்பு விழா திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வாரிய அதிகாரிகள், பிரபலங்கள், கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா தொடக்க விழாக்களுக்காக லாகூர் செல்வாரா என்பதை ஐசிசி மற்றும் பிசிபி இன்னும் உறுதிப்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |சிறுவயதிலேயே பழக்கம்..! ஸ்மித்துடனான 20 ஆண்டுகால நட்பு குறித்து பேசிய கவாஜா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாக்குதல் எதிரொலி: தில்லி முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு!

மாநாட்டுத் திடலில் குவிய ஆரம்பித்த தவெக தொண்டர்கள்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Vijay | Madurai

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு

தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

SCROLL FOR NEXT