முகப்பு
கிரிக்கெட்

இரட்டை சதம் விளாசி அசத்திய ஷுப்மன் கில்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.

Updated On : 3 ஜூலை, 2025 at 1:34 PM
இரட்டை சதம் விளாசிய மகிழ்ச்சியில் கேப்டன் ஷுப்மன் கில் - படம் | AP
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 2) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இரட்டை சதம் விளாசிய ஷுப்மன் கில்

முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்கள், கருண் நாயர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். ஷுப்மன் 114 ரன்களுடனும் ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று (ஜூலை 3) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியது முதலே கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்து அசத்தினார். இருப்பினும், அவர் 89 ரன்களில் ஜோஷ் டங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடி வரும் ஷுப்மன் கில் வேகமாக ரன்கள் குவித்து வருகிறார். சிறப்பாக விளையாடிய அவர் டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். அவர் 311 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார். அதில் 21 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 480 ரன்களைக் கடந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Indian captain Shubman Gill impressed with a double century in the second Test against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.