லண்டனில் இந்திய தூதரக அதிகாரிகளுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்தனர்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி’ தொடரில் விளையாடி வருகிறது. 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கும் நிலையில், கடைசியாக நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்தது.
இந்திய அணித் தரப்பில் கேப்டன் கில், ரவீந்திர ஜடேஜா, இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரும் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் மான்செஸ்டர் சதம் விளாசி அசத்தல் சாதனை படைத்தனர்.
இந்தத் தொடரைத் தீர்மானிக்கு 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் தி ஓவல் மைதானத்தில் வருகிற 31 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், இந்தத் தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், முன்னாள் தலைமைப் பயிற்சியாளரும் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி மற்றும் அணி நிர்வாகிகள் லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைச் சந்தித்தனர்.
அவர்களுக்கு வீரர்கள் கையொப்பமிட்ட பேட்டை இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இருவரும் பரிசளித்தனர். அப்போது அவர்கள் குழுவாகப் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
இதையும் படிக்க : இங்கிலாந்தில் ஜடேஜாவின் தனித்துவமான சாதனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.