கிரிக்கெட் திடலுக்கு சைக்கிளில் வந்த இங்கிலாந்து வீரர்கள். 
கிரிக்கெட்

கிரிக்கெட் திடலுக்கு சைக்கிளில் வந்த இங்கிலாந்து வீரர்கள்!

கிரிக்கெட் திடலுக்கு சைக்கிளில் வந்த இங்கிலாந்து வீரர்களைப் பற்றி...

DIN

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து வீரர்கள் சைக்கிளில் வந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், 2 போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து அணி 2-லும் வென்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இவ்விரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

லண்டனில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கியா ஓவல் மைதானத்திற்கு மேற்கிந்திய தீவுகள் அணியினர் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஆண்கள் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், உள்ளூர் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு டாஸ் ஒத்திவைக்கப்பட்டது.

மறுபுறம், இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் உள்ளிட்ட சில இங்கிலாந்து வீரர்கள் வாடகை சைக்கிள்களில் மைதானத்திற்கு வந்தனர். இந்த விடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பகிர்ந்துள்ள நிலையில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: ஆர்சிபிக்கு ஆதரவா..? குஜராத் வந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேக்கேதாட்டு அணை முயற்சி சட்ட விரோதமானது: பி.ஆா். பாண்டியன்

சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வருவாய்த் துறையினா் வலியுறுத்தல்!

சாலை விபத்தில் விவசாயி பலி!

பென்னாகரம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தனியாா் பள்ளி முதல்வா் கைது

விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT