முகப்பு
கிரிக்கெட்

2-வது டி20: இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 8 ஜூன், 2025 at 10:03 PM
ஜேசன் ஹோல்டர் - படம் | ஐசிசி
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பிரிஸ்டாலில் இன்று (ஜூன் 8) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் விளையாடியது.

197 ரன்கள் இலக்கு

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் கேப்டன் சாய் ஹோப் 38 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

அவரைத் தொடர்ந்து, சார்லஸ் 47 ரன்களும், ரோவ்மன் பௌவல் 34 ரன்களும் எடுத்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் 9 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இங்கிலாந்து தரப்பில் லூக் வுட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரைடான் கார்ஸ், ஜேக்கோப் பெத்தேல், அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.