கிரிக்கெட்

பெண் நடுவருடன் வாக்குவாதம்: அஸ்வினுக்கு அபராதம்!

பெண் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் வீரர் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் பெண் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் தமிழகத்தின் திண்டுக்கல், கோவை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன் இடையிலான போட்டி ஜூன் 8 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின், திருப்பூர் வீரர் சாய் கிஷோரின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அஸ்வின் அவரின் விக்கெட்டுக்கு மறுப்பு தெரிவித்தாலும் களநடுவர் கிருத்திகா, அவர் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

ஆனால், அந்தப் பந்து வெளியே செல்லுவது போன்று இருந்தது. முன்னதாக, ஒரே ஓவரில் திண்டுக்கல் அணியினர் வைடுக்காக இரண்டு ரிவியூக்களையும் இழக்க நேரிட்டதால், அஸ்வினால் நடுவரின் முடிவை எதிர்க்க முடியவில்லை.

இதனால், கடும் விரக்தியில் உரக்க கத்தியவாரே வெளியே சென்ற அஸ்வின், தனது பேட்டால் கால் பேடுகளில் கடுமையாகத் தாக்கினார். மேலும், தனது கையுறைகளையும் கோபத்துடன் மைதானத்துக்கு வெளியே தூக்கியெறிந்தார். கடுமையான கோபத்தை வெளிப்படுத்திய அஸ்வினின் விடியோக்களை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

நடுவர்களில் விசாரணையில் தன் மீதான தவறை அஸ்வின் ஒப்புக்கொண்டார். இதனால், அவருக்குப் போட்டிக் கட்டணத்தில் இருந்து 10 சதவிகிதமும், கிரிக்கெட் உபகரணங்களைத் தவறாக பயன்படுத்திய காரணத்துக்காக கூடுதலாக 20 சதவிகிதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ‘தல ஃபார் ரீசன்’ என்றே போற்றப்படுவீர்கள்! - தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT