படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் வெல்வது மிகவும் முக்கியம்: ஆஸி. வீரர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் என ஆஸ்திரேலிய வீரர் தெரிவித்துள்ளார்.

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை (ஜூன் 11) லார்ட்ஸ் திடலில் தொடங்குகிறது. இரண்டு அணிகளும் இறுதிப்போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது. ஐசிசி கோப்பையை முதல் முறையாக வெல்லும் கனவோடு தென்னாப்பிரிக்க அணி களம் காண்கிறது.

வெற்றி பெறுவது முக்கியம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், வலுவான ஆஸ்திரேலிய அணிகளில் ஒன்றாக உருவெடுக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த வாரத்தை மகிழ்ச்சியான வாரமாக மாற்றுவது மிகவும் முக்கியம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணி உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற தொடர்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதனை நினைத்து நாங்கள் உண்மையில் மிகுந்த பெருமையடைகிறோம். சிறந்த ஆஸ்திரேலிய அணிகளில் ஒன்றாக உருவெடுக்கும் பயணத்தில் நாங்கள் இருப்பது என்னுடைய கண்களுக்குத் தெரிகிறது.

நாங்கள் இன்னும் அதனை சாதிக்கவில்லை. ஆனால், எங்களது இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை அதற்கான படிக்கட்டாகப் பார்க்கிறோம். அதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் என்றார்.

37 வயதாகும் நாதன் லயன் ஆஸ்திரேலிய அணிக்காக 136 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 553 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT