மோதிக்கொண்ட ஆஸி. - தெ.ஆ. வீரர்கள் படம்: ஏபி
கிரிக்கெட்

டபிள்யூடபிள்யூஇ ஆக மாறிய கிரிக்கெட் போட்டி: மோதிக்கொண்ட ஆஸி. - தெ.ஆ. வீரர்கள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடந்த மோதல்கள் குறித்து...

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடந்த மோதல்களை ஐசிசி டபிள்யூடபிள்யூஇ உடன் ஒப்பிட்டு விடியோவாக வெளியிட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் ஜூன்.11 முதல் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212க்கு ஆட்டமிழக்க தென்னாப்பிரிக்கா 138க்கு ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸி. அணி 2ஆம் நாள் முடிவில் 144க்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க வீரர் கைல் வெர்ரைனை ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் ரன் ஓடும்போது தெரியாமல் மோதினார்.

அடுத்ததாக ஆஸி. கீப்பர் அலெக்ஸ் கேரியை தென்னாப்பிரிக்க வீரர் மகாராஜா ரன் ஓடும்போது மோதினார்.

இந்த விடியோ காட்சிகளை ஐசிசி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு டபிள்யூடபிள்யூஇ ஒலியுடன் இணைத்து வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்காக இரு அணிகளும் 100 சதவிகித உழைப்பைக் கொடுத்து வருகிறார்கள். இந்த விடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT