ஆஸ்திரேலிய அணி வீரர்கள் (கோப்புப் படம்) படம் | AP
கிரிக்கெட்

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யபட்டுள்ளது.

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யபட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நிறைவடைந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 25 முதல் தொடங்கவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. காயம் காரணமாக பிரண்டன் டாக்கெட்டுக்குப் பதிலாக அணியில் சீன் அப்பாட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் பிரண்டான் டாக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ரிசர்வ் வீரராக அணியில் இடம்பெற்றிருந்த அவர், காயம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய சீன் அப்பாட், பிரண்டான் டாக்கெட்டுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்பாட், ஸ்காட் போலாண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மாட் குன்ஹிமேன், மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரை வைகோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - | MDMK | Mallai Sathya | Vaiko | Political Interview

பாமக எனது கட்சி, நான்தான் தலைவர்! அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம்! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT