படம் | மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

கடைசி டி20: 20 சிக்ஸர்கள் விளாசிய மே.இ.தீவுகள்; அயர்லாந்துக்கு இமாலய இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூன் 15) நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.

சிக்ஸர் மழை பொழிந்த மே.இ.தீவுகள்

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் சிக்ஸர் மழையைப் பொழிந்தனர்.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய எவின் லீவிஸ் 44 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து 9 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சாய் ஹோப் 27 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

கீஸி கார்ட்டி 22 பந்துகளில் 49 ரன்கள் (4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தும், ரோமாரியோ ஷெப்பர்டு 6 பந்துகளில் 19 ரன்கள் (3 சிக்ஸர்கள்) எடுத்தும் களத்தில் இருந்தனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி மொத்தமாக 20 பவுண்டரிகள் மற்றும் 20 சிக்ஸர்கள் விளாசினர்.

அயர்லாந்து தரப்பில் மேத்யூ ஹம்ப்ரேஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மார்க் அடாய்ர், பேரி மெக்கார்த்தி மற்றும் பெஞ்சமின் ஒயிட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுதந்திர தின விழா: தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் MK Stalin!

தலைவன் தலைவி ஓடிடி ரிலீஸ் தேதி!

என்னை மனமார வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த்

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

மேற்கு வங்கத்தில் பயங்கர விபத்து! பேருந்து - டிரக் மோதியதில் 10 பேர் பலி!

SCROLL FOR NEXT