ஷர்துல் தாக்குர் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வோம்: ஷர்துல் தாக்குர்

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வோம் என இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார்.

DIN

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வோம் என இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் இரண்டு நாள்களில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் திடலில் நடைபெறுகிறது.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். இதனையடுத்து, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது.

ஷர்துல் தாக்குர் நம்பிக்கை

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் வெல்வோம் என இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வித்தியாசமான சவால்களை அளிக்கும் இங்கிலாந்து ஆடுகளங்களில் விளையாடவுள்ளது மிகவும் உற்சாகமாக இருப்பதாக நினைக்கிறேன். இங்கிலாந்தில் நிலவும் வானிலையை முதலாவதாகக் கூறுவேன். சில நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், சில நேரங்களில் சூரியன் பிரகாசமாக உள்ள நாளாக இருக்கும். வானிலை எப்படி இருப்பினும், வீரர்கள் அதற்கேற்றவாறு தங்களை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.

அணியில் புதிய ஆற்றல் இருப்பது நல்ல விஷயம். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். அணியில் திறமையான இளம் வீரர்கள் இடம்பெறுவது எப்போதும் உற்சாகமளிப்பதாக இருக்கும். இங்கிலாந்து அணியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய யுக்தியை பின்பற்றி விளையாடி வருகிறார்கள்.

வெளிநாடுகளில் தொடர்களைக் கைப்பற்றுவது எப்போதும் சிறப்பான விஷயமாக இருக்கும். இங்கிலாந்தில் நாங்கள் தொடரைக் கைப்பற்றினால், அது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் மிகப் பெரிய விஷயமாக இருக்கும். இங்கிலாந்தில் தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலைநயம்... சாக்‌ஷி மாலிக்!

முத்து நகை... பாவனா!

ஹிந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்கவே மாட்டார்கள்! -அமித் ஷா

சீனாவில் பெய்த கனமழையால் நேபாளத்தில் மீண்டும் வெள்ளம்!

பாஜகவை கேள்வி கேட்க காங்கிரஸுக்கு எந்தவித உரிமையும் இல்லை! -மாநிலங்களவையில் அமித் ஷா

SCROLL FOR NEXT