விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் பந்துவீச்சாளர் சூர்யா. படம்: டிஎன்பிஎல்.
கிரிக்கெட்

10 ரன்கள் தேவை, 19-ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகள்: ஆட்டத்தை மாற்றிய சூர்யா!

டிஎன்பிஎல் போட்டியில் ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய சூர்யா குறித்து...

DIN

டிஎன்பிஎல் போட்டியில் ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய சூர்யா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

சேலத்தில் நேற்று இரவு நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியும் நெல்லை ராயல்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 168/9 ரன்கள் சேர்க்க, அடுத்து விளையாடிய நெல்லை ராயல்ஸ் அணி 18.5ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் இரண்டு ஓவர்களுக்கு 10 ரன்கள் தேவையாக இருந்தபோது சூர்யா ஆனந்த் பந்துவீச வந்தார்.

அந்த ஓவரில் விக்கெட், 0, விக்கெட், விக்கெட், விக்கெட் என மிரட்டாக பந்துவீசி ஆட்டத்தையே மாற்றினார்.

இம்பாக்ட் வீரராக களமிறங்கிய சூர்யா ஆனந்த் 3.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் எடுத்து 24 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

இந்த அற்புதமான பந்துவீச்சுக்காக ஆட்ட நாயகன் விருதுபெற்றார். மதுரை பாந்தர்ஸ் அணிக்கு இது 2-ஆவது வெற்றியாகும்.

புள்ளிப் பட்டியலில் மதுரை பாந்தர்ஸ் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தை உயர்வுக்கான 3 காரணங்கள்?

10 நிமிடத்திற்கு ஒரு பெண், நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார்! - ஐ.நா.

மெழுகு டாலு நீ... ஸ்ரேயா கோஷல்!

நவ.28ல் உடுப்பியில் பிரதமர் மோடி சாலைவலம்!

பளிங்கு சிலை... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT