இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்  படம்: எக்ஸ் / ஜோ ரூட்
கிரிக்கெட்

1 vs 11: இந்திய அணியை விட அதிகமான சதங்கள் அடித்துள்ள ஜோ ரூட்!

அனுபமில்லாத இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்வது குறித்து...

DIN

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தற்போதைய இந்திய அணியை விட அதிகமான சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். அந்தளவுக்கு இளம் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன்.20) முதல் தொடங்குகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஆர். அஸ்வின் ஓய்வு பெற்றதால் இந்திய அணி மிகவும் அனுபவமற்ற வீரர்களுடன் சென்றிருக்கிறது.

இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாகவும் ரிஷப் பந்த் துணை கேப்டனாகவும் செயல்படுகிறார்கள்.

இங்கிலாந்தின் ஜோ ரூட் 153 டெஸ்ட் போட்டிகளில் 13,006 ரன்கள் குவித்துள்ளார். இதில் 36 சதங்கள், 65 அரைசதங்கள் அடித்துள்ளார்.

தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் ஒட்டுமொத்த வீரர்களின் சதங்களை (29) விட ஜோ ரூட் (36) அதிகமாக அடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சதமடித்தவர்கள் விவரங்கள்

கே.எல்.ராகுல் - 8

ஷுப்மன் கில் - 5

ரிஷப் பந்த் - 6

ஜெய்ஸ்வால் - 4

ரவீந்திர ஜடேஜா - 4

கருண் நாயர் - 1

நிதீஷ்குமார் ரெட்டி - 1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெய்வ தரிசனம்... காணாமல் போன பொருள் கிடைக்க திருமுருகபூண்டி திருமுருகநாதஸ்வாமி!

தே.ஜ. கூட்டணி எம்பிக்கள் கூட்டம்: பிரதமர் மோடி, சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!

பழங்குடியினரின் 8 கோடி சதுர அடி நிலத்தை அதானிக்கு வழங்கிய அசாம் அரசு!

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சின்சினாட்டி ஓபன் இறுதிப்போட்டி: பாதியில் விலகிய சின்னர்.. அல்காரஸ் சாம்பியன்.!

SCROLL FOR NEXT