விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள் படம் | AP
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் திடலில் நேற்று (ஜூன் 20) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

மூவர் சதம்; 471 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 147 ரன்கள் குவித்தார்.

அவரைத் தொடர்ந்து, துணைக் கேப்டன் ரிஷப் பந்த் 134 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களும் எடுத்தனர். கே.எல்.ராகுல் 42 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பிரைடான் கார்ஸ் மற்றும் சோயப் பஷீர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

மழை காரணமாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடுவது தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

வார பலன்கள் - கன்னி

வார பலன்கள் - சிம்மம்

கீழவைப்பாறு விண்ணேற்ற மாதா கோயில் 468-வது ஆண்டுத் திருவிழா!

SCROLL FOR NEXT