படம் | ஐசிசி
கிரிக்கெட்

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலிருந்து இலங்கை வீரர் விலகல்!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் விலகியுள்ளார்.

DIN

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் விலகியுள்ளார்.

வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் நாளை (ஜூன் 25) கொழும்புவில் தொடங்குகிறது.

மிலன் ரத்னாயகே விலகல்

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிலன் ரத்னாயகே காயம் காரணமாக அந்த போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஏஞ்சலோ மேத்யூஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இதன் காரணமாக, இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் விஸ்வா ஃபெர்னாண்டோ மற்றும் துனித் வெல்லாலகே இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விஸ்வா ஃபெர்னாண்டோ இலங்கை அணிக்காக இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 79 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். துனித் வெல்லாலகே இலங்கை அணிக்காக இதுவரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலையே பாதி மாயம் செய்யும்... கல்பனா சர்மா!

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவமனையில் அனுமதி!

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே புதிய பாடல்!

SCROLL FOR NEXT