குல்தீப் யாதவ்  (கோப்புப் படம்)
கிரிக்கெட்

ஷர்துல் தாக்குரை நீக்கிவிட்டு குல்தீப் யாதவைத் தேர்வு செய்யுங்கள்: மஞ்ச்ரேக்கர்

இங்கிலாந்துடனான தோல்வி குறித்து முன்னாள் வீரர் பேசியதாவது...

DIN

ஷர்துல் தாக்குரை நீக்கிவிட்டு குல்தீப் யாத்வை தேர்வு செய்யுங்கள் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இந்திய அணி முதலிரண்டு இன்னிக்ஸில் 471, 364 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 465, 373 ரன்களை எடுத்து வென்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி நாளில் 371 ரன்கள் தேவையான நிலையில் இங்கிலாந்து 82 ஓவர்களில் சேஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி தனது மோசமான பந்துவீச்சினால் தோல்வியுற்றது. கேட்ச் பிடிக்க தவறியதும் இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது.

இந்நிலையில், முன்னாள் வீரர் சஞ்சய மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:

குல்தீப் யாதவ் கம்பேக் தர வேண்டும். இதைச் சொல்லுவதற்காக என்னை மன்னிக்க வேண்டும். ஷர்துல் தாக்குரை அணியில் இருந்து நீக்க வேண்டும். இந்த ஒரு மாற்றத்தையாவது இந்திய அணி செய்ய வேண்டும்.

நிதீஷ் ரெட்டி விஷயத்தில் அவர் ஆஸ்திரேலியாவில் செய்ததை வைத்தே அவரை தக்க வைக்க வேண்டுமென நினைக்கிறார்கள். அவர் அணியில் வந்தால் அணியின் சமநிலை குலைகிறது.

நிதீஷ் 4-ஆவது வேகப் பந்துவீச்சாளர் மாதிரி பந்துவீசுவதில்லை. அதனால், இந்தியா கடினமான முடிவை எடுத்தாக வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே! காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டம்!

Dinamani வார ராசிபலன்! | Aug 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஒன்பது முக்கிய அறிவிப்புகள்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்!

மேட்டூர் அணை நீர் நிலவரம்!

SCROLL FOR NEXT