கிரிக்கெட்

இந்தியா - ஆஸி. தொடருக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!

இந்தியா - ஆஸி. தொடருக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இந்தியா - ஆஸி. தொடருக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வருகிற அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. அக்டோபர் 23 மற்றும் அக்டோபர் 25 ஆம் தேதிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் அடிலைடு மற்றும் சிட்னியில் முறையே நடைபெறுகின்றன. அதன் பின், அக்டோபர் 29 முதல் டி20 தொடர் தொடங்குகிறது.

விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடர் தொடங்குவதற்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில், போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த இரண்டு தொடர்களையும் சேர்த்து, 8 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளுக்கு 90,000-க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகவும், சிட்னியில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் கேன்பெராவில் நடைபெறும முதல் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு விற்பனையான மொத்த டிக்கெட்டுகளில் 16 சதவிகித டிக்கெட்டுகளை இந்திய ரசிகர் மன்றங்கள் வாங்கியுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

India's white-ball tour of Australia is still four months away but Cricket Australia (CA) has already more than 90,000 tickets for eight matches with third ODI in Sydney and first Twenty20 in Canberra completely sold out.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காளிமுத்து மறைவு: முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் இரங்கல்

வழக்கமான இன்னொரு நாள்... பார்வதி!

முதல்நாள் வசூல்: தமிழில் சாதனை படைத்த கூலி..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி!

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

SCROLL FOR NEXT