தனது அறுவைச் சிகிச்சை முடிந்தவுடன் புகைப்படத்தைப் பகிர்ந்த சூர்யகுமார்.  படம்: இன்ஸ்டா / சூர்யகுமார் யாதவ்.
கிரிக்கெட்

இந்திய கேப்டன் சூர்யகுமாருக்கு அறுவைச் சிகிச்சை..! மீண்டும் எப்போது விளையாடுவார்?

இந்தியாவின் டி20 கேப்டன் சூர்யகுமாருக்கு நிகழ்ந்த அறுவைச் சிகிச்சைக் குறித்து...

DIN

இந்தியாவின் டி20 கேப்டன் சூர்யகுமார் தனக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகக் கூறியுள்ளார்.

ஜெர்மனி மியூனிக்கில் குடலிறக்கத்துக்காக அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்போது, ஓய்வு எடுத்து வருகிறார்.

கடைசியாக ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல சாதனைகளை சூர்யகுமார் யாதவ் நிகழ்த்தினார்.

ஒரு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களாக 618-ஆக இருந்தது. அந்த சாதனை சச்சின் கைவசம் இருந்தது.

சூர்யகுமார் யாதவ் இந்த சீசனில் 14 போட்டிகளில் 640 ரன்களை கடந்து (717) சச்சின் சாதனையை முறியடித்தார்.

34 வயதாகும் சூர்யகுமார் யாதவ் மிடில் ஆர்டராக இந்திய அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் விளையாடுகிறார்.

தொடக்க வீரர்கள் செய்யும் சாதனைகளை எல்லாம் மிடில் ஆர்டரில் இறங்கி செய்வது மிகவும் அதிசயமானது என பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.

தொடர்ச்சியாக 25க்கும் அதிகமான ரன்களை 16 முறை அடித்து புதிய சாதனையையும் இந்த ஐபிஎல் தொடரில் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்துடன் ஆக. 26ஆம் தேதி டி20 போட்டியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவைச் சிகிச்சை புகைப்படத்தைப் பகிர்ந்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் சூர்யகுமார் யாதவ், “வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நடந்தது. குணமாகி வருகிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆவலுடன் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Summary

Indias T20I captain Surya kumar Yadav had a successful hernia surgery in Munich, Germany and is currently in recovery.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முதலாக விஜய் குறித்து பேசிய இபிஎஸ்! சொன்னது என்ன?

புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வேன்... ஆஸி. மகளிரணியின் புதிய கேப்டன்!

முதல் டி20: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான்!

சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை! ஆயுதங்கள் பறிமுதல்!

இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ஜவுளி நிறுவனங்களுக்கு 20% மானியம்! - முதல்வர் அறிவிப்பு

SCROLL FOR NEXT