ஜோஃப்ரா ஆர்ச்சர் படம் | AP
கிரிக்கெட்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர்; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோஃப்ரா ஆர்ச்சர் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்.

DIN

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோஃப்ரா ஆர்ச்சர் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

முதல் போட்டியில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சராசரியாகவே இருந்தது. அந்த அணியின் பந்துவீச்சு வலுவாக இல்லை. அதன் காரணமாக, 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.

முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

வருகிற ஜூலை 2 ஆம் தேதி முதல் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேசியுள்ளார்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் குறித்து அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணிக்காக ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடுவதை நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். ஏனெனில், அவர் அணியில் விளையாடும்போது, இங்கிலாந்து அணி மேலும் சிறப்பாக செயல்படும். அவர் அணியில் விளையாடும்போது, பெரிய தொடர்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு சிறப்பாக இருக்கிறது என்றார்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் கடைசியாக இந்தியாவுக்கு எதிராக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அகமதாபாதில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Jofra Archer has returned to the England team after a long break with the Test series against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆா். முகவா்கள் கூட்டத்தில் வாக்குவாதம்

பள்ளத்தில் கவிழ்ந்த காா்: 10 போ் படுகாயம்

என்டிசி பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு பேரிடா் கால நிவாரணம் வழங்கக் கோரிக்கை

நவ. 23 -இல் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

மீனவ சமுதாய பட்டதாரி இளைஞா்களுக்கு குடிமைப்பணி போட்டித் தோ்வுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT