வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ படம் | AP
கிரிக்கெட்

மிகுந்த ஏமாற்றமளிக்கிறது; டெஸ்ட் தொடரை இழந்ததால் புலம்பும் வங்கதேச கேப்டன்!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தெரிவித்துள்ளார்.

DIN

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய வங்கதேசம் அதன் முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 458 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், வங்கதேசத்தைக் காட்டிலும் இலங்கை அணி 211 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் 133 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

புலம்பும் வங்கதேச கேப்டன்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி மிகவும் ஏமாற்றமளிப்பதாக வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டியை நாங்கள் முடித்துள்ள விதம் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் நன்றாக விளையாடவில்லை. நன்றாக விளையாடாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. முதல் இன்னிங்ஸில் நாங்கள் சரியாக விளையாடாதது எங்களது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

முதலில் பேட்டிங் செய்தது சரியான முடிவு என்பதை இப்போதும் என்னால் உணர முடிகிறது. ஆனால், நாங்கள் சரியாக விளையாடவில்லை. முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கின்போது, நிறைய தவறுகளை செய்துவிட்டோம். மூன்றாம் நாளில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம் என்றார்.

இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

summary

Bangladesh captain Nazmul Hossain Shanto has expressed his disappointment over the defeat in the second Test against Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவணி மாதப் பலன்கள் - தனுசு

ஆவணி மாதப் பலன்கள் - விருச்சிகம்

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் குடியேறும் போராட்டம்!

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழக எம்.பி.க்கள் ஆதரவளிக்க வேண்டும்: இபிஎஸ், நயினார் நாகேந்திரன்

ஆவணி மாதப் பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT