படம் | சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (எக்ஸ்)
கிரிக்கெட்

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது சிறப்பான சாதனை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

DIN

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது சிறப்பான சாதனை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்தியா மாஸ்டர்ஸ் அணி இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

சிறப்பான சாதனை

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது சிறப்பான சாதனை எனவும், ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டதற்கு கிடைத்த வெற்றி எனவும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது மிகவும் சிறப்பான சாதனை. இந்த வெற்றி ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டதை காட்டுகிறது. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் வெவ்வேறு சூழல்களில் சிறப்பாக செயல்பட்டனர்.

யூசுப் பதானின் அதிரடியான ஆட்டம் இலங்கைக்கு எதிராக பெரிய அளவிலான ரன்கள் குவிக்க உதவியது. சங்ககாராவின் விக்கெட்டினை மிகவும் முக்கியமான தருணத்தில் இர்ஃபான் பதான் கைப்பற்றினார். அதன் பின், அபிமன்யு மிதுன் நெருக்கடி அளிக்கும் விதமாக சிறப்பாக பந்துவீசினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் சிறப்பாக செயல்பட்டார். அவர் அதிரடியாக விளையாடினார். ஷாபாஸ் நதீம் அற்புதமாக பந்துவீசினார். அவர் முக்கியமான தருணத்தில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்றார்.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 25 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ப்ரோ கோட் பெயர் மாற்றம்? ரவி மோகன் பட ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

சென்சார் சர்ச்சை குறித்து கனிமொழி! | ஜன நாயகன் | DMK

‘போர் தொழில்’ விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷின் புதிய படம் பெயர் அறிவிப்பு!

விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கணும்! ரஜினியின் பொங்கல் வாழ்த்து!

தைத்திருநாள் வந்தாச்சு! தமிழகமெங்கும் பொங்கல் கொண்டாட்டம்!

SCROLL FOR NEXT