லதாமுடன் பிரேஸ்வெல்.. 
கிரிக்கெட்

பாக். ஒருநாள் தொடர்: நியூசி. கேப்டன் லதாம் விலகல்! புதிய கேப்டன் யார்?

பாகிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து கேப்டன் லதாம் விலகல்..

DIN

பாகிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து நியூசிலாந்து கேப்டன் டாம் லதாம் விலகுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால், அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியின் கேப்டனான டாம் லதாமுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மொத்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால், அவருக்குப் பதிலாக டி20 தொடரின் கேப்டனான மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கு அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

டாம் லதாமுக்குப் பதிலாக இளம் வீரர் ஹென்றி நிக்கோல்ஸுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தொடக்க ஆட்டக்காரர் வில் யங்கிற்கு முதல் குழந்தை பிறக்கவிருப்பதால் அவர் கடைசி 2 போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அவருக்குப் பதிலாக ரைஸ் மரியுவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 12 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள ரைஸ் மரியு 328 ரன்கள் குவித்திருக்கிறார்.

நியூசிலாந்து அணி விவரம்

முகமது அப்பாஸ், ஆதி அசோக், மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஹென்றி நிக்கோல்ஸ், மார்க் சாம்ப்மேன், ஜேக்கப் டஃப்பி, மிட்ச் ஹெய், நிக் கெல்லி, டேரில் மிட்செல், வில் ஓரூர்க், பென் ஸீர்ஸ், நாதன் ஸ்மித், வில் யங்(1 போட்டி மட்டும்), ரைஸ் மிரியு.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இங்கிலாந்து தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகலா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 2

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 1

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

SCROLL FOR NEXT