பென் ஸ்டோக்ஸ் படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

காயத்திலிருந்து மீண்டு வருவதற்காக மது அருந்துவதை கைவிட்ட பென் ஸ்டோக்ஸ்!

காயத்திலிருந்து மீண்டு வருவதற்காக மது அருந்துவதை கைவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

DIN

காயத்திலிருந்து மீண்டு வருவதற்காக மது அருந்துவதை கைவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, காயம் ஏற்பட்டது. அதன் பின், பென் ஸ்டோக்ஸ் பல மாதங்களாக கிரிக்கெட் விளையாடவில்லை. அவர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து அணியுடன் மீண்டும் இணையவுள்ளார்.

மது அருந்துவதை கைவிட்ட பென் ஸ்டோக்ஸ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ள நிலையில், காயத்திலிருந்து மீண்டு வருவதற்காக மது அருந்துவதை கைவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் பென் ஸ்டோக்ஸ் பேசியதாவது: எனக்கு முதல் முறையாக பெரிய காயம் ஏற்பட்டது குறித்து நினைவிருக்கிறது. அந்த காயம் ஏற்படுவதற்கு 5 நாள்களுக்கு முன்பாக நாங்கள் சிறிது மது அருந்தியிருந்தோம். அதன் காரணமாக, அந்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என நினைத்தேன். அதன் பின், நன்றாக இருப்பதாக உணர்ந்தேன்.

என்னுடைய பழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினேன். கடந்த ஜனவரி 2 ஆம் தேதியிலிருந்து நான் மது அருந்தவில்லை. எனது காயம் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கும் வரை மது அருந்த மாட்டேன் என கூறிக்கொண்டேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

முதலமைச்சா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கடகத்துக்கு யோகம்.. தினப்பலன்கள்!

சத்தீஸ்கா் மழை வெள்ளம்: திருப்பத்தூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழப்பு

வேன் மோதி இளைஞா் மரணம்

SCROLL FOR NEXT