படம் | AP
கிரிக்கெட்

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவன் அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (மே 31) அறிவித்துள்ளது.

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (மே 31) அறிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (மே 31) அறிவித்துள்ளது.

காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டான் மீதமுள்ள ஒருநாள் போட்டிகளிலிருந்தும், டி20 தொடரிலிருந்தும் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவனில் மேத்யூ பாட்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

2-வது ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் விவரம்

பென் டக்கெட், ஜேமி ஸ்மித்,ஜோ ரூட், ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேக்கோப் பெத்தேல், வில் ஜாக்ஸ், பிரைடான் கார்ஸ், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத், சாக்யூப் மஹ்முத்

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூன் 1) கார்டிஃபில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT