இந்திய அணியினர். படம்: ஏபி
கிரிக்கெட்

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினருக்கு டாடா சியரா கார் பரிசு!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினருக்கு புதிய டாடா சியரா எஸ்யூவி கார் பரிசாக வழங்கப்படவுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகளுக்கு புதியதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள டாடா சியரா காரை பரிசாக வழங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மகளிருக்கான 13-வது ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டம் கடந்த நவ. 2 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் திடலில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்றது.

முதல்முறையாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசியின் பரிசுத் தொகையைத் தவிர்த்து பிசிசிஐ சார்பில் ரூ.51 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளருக்கு அவரவர் மாநில அரசுகளும் தனித்தனியே பரிசுத் தொகையை அறிவித்துள்ளன.

அதுமட்டுமின்றி கோப்பையை வென்ற இந்திய அணியினரை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோரும் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கோப்பையை வென்ற இந்திய அணியினரைக் கௌரவிக்கும் விதமாக விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள சுமார் ரூ.15- 25 லட்சம் மதிப்புள்ள டாடா சியரா காரை, இந்திய அணியில் அங்கம் வகித்த அனைத்து வீராங்கனைகளுக்கும் பரிசாக வழங்க டாடா மோட்டார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நாட்டுக்கு பெருமை சேர்ப்பதிலும், அவர்களின் தீவிர அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், புதிய விலையுயர்ந்த காரை வழங்க முடிவு செய்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tata Motors to gift new Sierra SUV to Women's World Cup-winning Indian team

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கும்கி 2 - டிரைலர் வெளியீடு!

அன்பே... பெரோஷா கான்!

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து, தயவுசெய்து உதவுங்கள்; பாடகி சின்மயி புகார்!

சென்னை > தோஹா > ரியாத் > குவைத் > துபை > சென்னை... கல்யாணி பிரியதர்சன்!

டிஜிட்டல் மோசடியில் ரூ.1500 கோடி! யாரைக் குறிவைக்கிறார்கள்? நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

SCROLL FOR NEXT