கடைசி ஒருநாள்: டி காக் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 144 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ஃபைசலாபாதில் இன்று (நவம்பர் 8) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 37.5 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 70 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, லுஹான் டி பிரிடோரியஸ் 39 ரன்கள் எடுத்தும், பிரீட்ஸ்க் மற்றும் பீட்டர் தலா 16 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது நவாஸ், சல்மான் அகா மற்றும் ஷகீன் அஃப்ரிடி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.