வங்கதேச அணி ஐந்து மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அயர்லாந்து அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை (நவம்பர் 11) சில்ஹட் சர்வதேச திடலில் தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதற்கு முன்பாக வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை மட்டும் டெஸ்ட் போட்டியில் மோதியுள்ளன. அந்தப் போட்டியில் வங்கதேச அணி, அயர்லாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த நிலையில், தற்போது இரண்டு அணிகளும் தங்களுக்குள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதிக் கொள்ளவுள்ளன.
இந்த ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய அயர்லாந்து அணி, அந்த அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக வெற்றி பெற்ற உத்வேகத்தில் அயர்லாந்து அணி வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் களமிறங்குகிறது.
கடைசியாக கடந்த ஜூனில் வங்கதேச அணி டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.