இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது என தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி எச்சரித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 14 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் திடலில் தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது என தென்னாப்பிரிக்காவை சௌரவ் கங்குலி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோஸ்டாரில் அவர் பேசியதாவது: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு இந்த சுற்றுப்பயணம் மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது. இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடுவது ஒருபோதும் எளிதாக இருக்கப் போவதில்லை. இந்திய துணைக் கண்டத்தில் இந்திய அணி மிகவும் வலிமையான அணி. வெளிநாடுகளிலும் இந்திய அணி வலுவான அணியாக மாறியுள்ளது.
ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். தென்னாப்பிரிக்க அணியும் மிகவும் வலுவான அணி. அதனால், இந்த தொடர் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும் என்றார்.
இதையும் படிக்க: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியம்: முகமது சிராஜ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.