முகப்பு
கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா முன்னேற்றம்! இந்திய அணிக்கு பின்னடைவு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Updated On : 16 நவம்பர் 2025, 5:54 pm IST
- படம் | AP
பகிர்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி 24 புள்ளிகளைப் பெற்றது. அந்த அணி 66.67 சதவிகித வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த தரவரிசையில் இலங்கை அணி 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்ததால், இந்திய அணி தரவரிசையில் 4-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 100 சதவிகித வெற்றிகளுடன் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

South Africa has moved up to second place in the World Test Championship rankings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.