இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கழுத்தில் ஏற்பட்ட காயத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் காயத்தினால் முதல் டெஸ்ட்டில் இருந்து அவர் வெளியேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
முதல் இன்னிங்ஸில் ஏற்பட்ட காயத்தினால் ஆட்டத்தை விட்டு வெளியேறினார். ரிஷப் பந்த் கேப்டனாக செயல்பட, இவருக்குப் பதிலாக படிக்கல் ஃபீல்டிங் வந்தார்.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றிபெற 124 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஷுப்மன் கில் உடல்நிலை குறித்து பிசிசிஐ கூறியுள்ளதாவது:
தற்போது, ஷுப்மன் கில் மருத்துவமனையில் பரிசோதனையில் இருக்கிறார்.
களத்தில் தாறுமாறான பவுன்ஸ் இருப்பதால் ஷுப்மன் கில் பேட்டிங் செய்யமாட்டார். மேலும், முதல் டெஸ்ட்டில் இருந்து விலகுகிறார்.
பிசிசிஐயின் மருத்துவக் குழுவினால் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார் என்றார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் மோர்னே மோர்கல், “அவருக்கு எப்படி கழுத்து வலி வந்தது எனக் கண்டறிய வேண்டும். அநேகமாக அவர் இரவில் தூங்கும்போது ஏற்பட்டிருக்கலாம். வேலைப் பழுவினால் அல்ல” எனக் கூறியுள்ளார்.
ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கு கில் கேப்டனாக இருக்கிறார். டி20களிலும் துணை கேப்டானாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.