டேரில் மிட்செல். படம்: ஐசிசி
கிரிக்கெட்

ரோஹித்தை முந்திய டேரில் மிட்செல்.. ஐசிசி தரவரிசையில் 46 ஆண்டுகளுக்குப் பின் சாதனை!

ஐசிசி ஒரு நாள் பேட்டிங் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஐசிசி ஒரு நாள் பேட்டிங் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் ஆடவர் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வாரத்துக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியல் இன்று (நவ.19) வெளியிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்தத் தொடரில் கடந்த 16 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலின் அதிரடியான ஆட்டத்தால் தொடரை வெற்றியுடன் தொடங்கியது. இந்தப் போட்டியில் 119 ரன்கள் விளாசிய டேரில் மிட்செல் ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார்.

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 36 புள்ளிகளைப் பெற்ற டேரில் மிட்செல், 746 புள்ளிகளில் இருந்து 782 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதன்மூலம், 46 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தவர் என்ற பெருமையையும் மிட்செல் பெற்றுள்ளார். முன்னதாக, 1979 ஆம் ஆண்டு க்ளென் டர்னர் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தார்.

மார்டின் க்ரோவ், ஆண்ட்ரூ ஜோன்ஸ், ரோஜர் டோவ்ஸ், நேதன் அஸ்லே, கேன் வில்லியம்சன், மார்டின் கப்தில், ராஸ் டெய்லர் உள்ளிட்டோர் முதல் 5 இடங்களைப் பிடித்திருந்தாலும், முதலிடம் என்ற அரியணையைப் பிடித்தது கிடையாது.

முதலிடத்தில் இருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 781 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு சரிந்துள்ளார்.

ஐசிசி ஒரு நாள் பேட்டர்களுக்கு தரவரிசைப் பட்டியல்

  1. டேரில் மிட்செல் - 782 புள்ளிகள்

  2. ரோஹித் சர்மா - 781 புள்ளிகள்

  3. இப்ராஹிக் ஜத்ரன் - 764 புள்ளிகள்

  4. ஷுப்மன் கில் - 745 புள்ளிகள்

  5. விராட் கோலி - 725 புள்ளிகள்

  6. பாபர் அசாம் - 722 புள்ளிகள்

  7. ஹாரி டெக்டர் - 708 புள்ளிகள்

  8. ஷ்ரேயஸ் ஐயர் - 700 புள்ளிகள்

  9. சரித் அசலங்கா - 690 புள்ளிகள்

  10. ஷாய் ஹோப் - 689 புள்ளிகள்

Rohit's reign over as New Zealand batter claims top ranking Daryl Mitchell

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக ஆட்சியில் ஸ்கூட்டி கொடுக்கப்படவில்லையா? கனிமொழிக்கு பதிலடி

பிலிப்பின்ஸில் 350 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா? பங்கேற்காதா?

காஸாவில் இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் விரைவில் அமல்!

ஹிந்துஸ்தான் ஜிங்க் 3வது காலாண்டு நிகர லாபம் 46% உயர்வு!

SCROLL FOR NEXT