ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தோல்வியுறாத கேப்டனாக இருந்து வருகிறார்.
முதல் ஆஷஸ் போட்டி வரும் நவ.21ஆம் தேதி பெர்த் கிரிக்கெட் திடலில் தொடங்குகிறது.
பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் விளையாடாமல் இருப்பதால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுகிறார்.
இதுவரை, ஆஷஸ் தொரரில் ஸ்டீவ் ஸ்மித் 6 போட்டிகளில் கேப்டனாக இருந்து, 5 போட்டிகளில் வெற்றி, 1 போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது.
1. பிரிஸ்பேன், 2017 - வெற்றி
2. அடிலெய்டு, 2017 - வெற்றி
3. வாக்கா, 2017 - வெற்றி
4. மெல்போர்ன், 2017 - டிரா
5. சிட்னி, 2018 - வெற்றி
6. அடிலெய்டு, 2021 - வெற்றி
தோல்வியே காணாத ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.
ஸ்டீவ் ஸ்மித் 119 டெஸ்ட் போட்டிகளில் 10,477 ரன்கள் குவித்துள்ளார். இதில் 36 சதம், 43 அரைசதங்கள் அடங்கும். சராசரி 56.02-ஆக இருக்கிறது.
கேப்டனாக இருக்கும்போது ஸ்டீவ் ஸ்மித் 24 போட்டிகளில் 2,711 ரன்கள் குவித்துள்ளார். அதில் 12 சதங்கள் அடங்கும்.
ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருக்கும்போது சராசரி 73.27-ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.