படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் அயர்லாந்து!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று (நவம்பர் 19) தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 476 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் லிட்டன் தாஸ் மற்றும் முஷ்ஃபிகர் ரஹீம் சதம் விளாசி அசத்தினர். லிட்டன் தாஸ் 128 ரன்களும் (8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்), முஷ்ஃபிகர் ரஹீம் 106 ரன்களும் (5 பவுண்டரிகள்) எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, மோமினுல் ஹேக் 63 ரன்களும், மெஹிதி ஹாசன் மிராஸ் 47 ரன்களும் எடுத்தனர்.

அயர்லாந்து தரப்பில் ஆண்டி மெக்பிரின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேத்யூ ஹம்பிரீஸ் மற்றும் கேவின் ஹோ தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அயர்லாந்து தடுமாற்றம்

வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 476 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அயர்லாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் பால் ஸ்டிரிலிங் 27 ரன்களும், கேப்டன் ஆண்ட்ரூ பல்பிர்னி 21 ரன்களும் எடுத்தனர். கேட் கார்மைக்கேல் 17 ரன்களும், ஹாரி டெக்டார் 14 ரன்களும் எடுத்தனர்.

வங்கதேசம் தரப்பில் ஹாசன் முரத் 2 விக்கெட்டுகளையும், காலித் அகமது, தைஜுல் இஸ்லாம் மற்றும் மெஹிதி ஹாசன் மிராஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

லோர்கான் டக்கர் 11 ரன்களுடனும், ஸ்டீஃபன் டொஹெனி 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அயர்லாந்து அணி வங்கதேசத்தைக் காட்டிலும் 378 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ireland are struggling by losing wickets in the first innings of the second Test against Bangladesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

SCROLL FOR NEXT