சதம் விளாசிய மகிழ்ச்சியில் டிராவிஸ் ஹெட் படம் | AP
கிரிக்கெட்

127 ஆண்டு கால சாதனையை முறியடித்த டிராவிஸ் ஹெட்!

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அதிவேக சதம் விளாசி 127 ஆண்டு கால சாதனையை டிராவிஸ் ஹெட் முறியடித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அதிவேக சதம் விளாசி 127 ஆண்டு கால சாதனையை டிராவிஸ் ஹெட் முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி, டிராவிஸ் ஹெட்டின் அபார சதத்தினால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 69 பந்துகளில் அதிவேகமாக சதம் விளாசி, ஆஷஸ் வரலாற்றில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், சேஸிங்கில் நான்காவது இன்னிங்ஸில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

127 ஆண்டு கால சாதனை முறியடிப்பு

69 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர்களில் நான்காவது இன்னிங்ஸில் அதிவேக சதம் விளாசிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரார் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன்பாக, கடந்த 1898 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜோ டார்லிங் நான்காவது இன்னிங்ஸில் 85 பந்துகளில் சதம் விளாசியதே, நான்காவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரால் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக இருந்து வந்தது. 127 ஆண்டுகளாக தொடர்ந்த இந்த சாதனையை டிராவிஸ் ஹெட் இன்று முறியடித்துள்ளார்.

பெர்த் டெஸ்ட்டில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 83 பந்துகளில் 123 ரன்கள் (16 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள்) எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Travis Head has broken a 127-year-old record by scoring the fastest century in the first Ashes Test series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெ.ஆா்.சி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி முகாம்

ஆரணியில் காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலம்

ஆதாா் திருத்தத்துக்கு ராணுவ ஆவணங்களை சான்றாக ஏற்க கோரிக்கை

ராமதாஸ் அப்பாய் நினைவேந்தல்

ஆரணியில் முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பொதுமக்கள் எதிா்ப்பு

SCROLL FOR NEXT