குவாஹாட்டி டெஸ்ட்டிலும் இந்திய அணி மோசமாக பேட்டி செய்து வருகிறது.
மூன்றாம் நாளின் குளிர்பான இடைவேளைவரை இந்திய அணி 141 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
முதல் டெஸ்ட்டில் 124 ரன்களை அடிக்க முடியாமல் இந்திய அணி கொல்கத்தாவில் தோல்வியுற்றது.
தற்போது, குவாஹாட்டியிலும் இந்திய அணி 141 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியாவில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
தென்னாப்பிரிக்கா சார்பாக மார்கோ யான்சென் 4, சிமோன் ஹார்மர் 2, கேசவ் மகாராஜ் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.
தற்போது, வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் விளையாடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.