முதல் ஆஷஸ் டெஸ்ட்டில் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்று வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
பெர்த் திடலில் நடைபெற்ற முதல் ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
1921-க்குப் பிறகு முதல்முறையாக இரண்டு நாள்களில் ஆட்டம் முமுடிவுக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியைப் பார்க்க இரண்டு நாளில் வந்தவர்களின் எண்ணிக்கை 101,514 என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
முதல்நாளில் 51,531 பார்வையாளர்களும் இரண்டாவது நாளில் 49,983 பார்வையாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதற்கு முன்பாக, பெர்த்தில் கடந்தாண்டு நடைபெற்ற இந்தியா - ஆஸி. மோதிய பிஜிடி தொடரில் அதிகபட்சமாக 96,463 பார்வையாளர்கள் வந்திருந்தார்கள்.
5 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் வரும் டிச.4ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.