முகப்பு
கிரிக்கெட்

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

முத்தரப்பு டி20 தொடரில் முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 27 நவம்பர், 2025 at 3:07 PM
பகிர்:

முத்தரப்பு டி20 தொடரில் முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது.

முத்தரப்பு டி20 தொடரில் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை முதலில் விளையாடியது.

இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக கமில் மிஷாரா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, குசல் மெண்டிஸ் 40 ரன்களும், ஜனித் லியாநாகே 24 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சல்மான் மிர்ஸா மற்றும் சைம் ஆயுப் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

summary

Sri Lanka, playing first in the tri-nation T20 series, scored 184 runs for the loss of 5 wickets in the stipulated 20 overs.

முழு கட்டுரையைப் படிக்க →