இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது தோழி ஸ்மிருதி மந்தனாவுக்காக மகளிர் பிபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
தோழியின் இக்கட்டான நேரத்தில் பணம் தேவையில்லை என வெளிநாட்டு தொடரில் இருந்து விலகிய இவரது செயலுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
துயரத்தில் ஸ்மிருதி மந்தனா
இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதனால், 10 நாள்கள் விடுமுறையில் ஜெமிமா இந்தியாவுக்கு வந்தார்.
மந்தனாவின் தந்தை உடல்நிலை மோசமானது. மேலும் அவரது காதலனும் ஏமாற்றிவிட்டதாக தகவல்கள் பரவின. அதனால், திருமணம் நடைபெறுமா என்பது கேள்விக்குரியாகி உள்ளது.
இந்த நிலையில், மகளிர் பிபிஎல் சீசனில் இருந்து ஜெமிமாவை விடுவித்துள்ளது.
மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஜெமிமா சிறப்பாக விளையாடி வெல்வதற்கு காரணமாக அமைந்தார்.
நட்புக்கு இலக்கணம்!
பிரிஸ்பேட் ஹீட் அணிக்காக விளையாடும் ஜெமிமா மீதமூள்ள நான்கு போட்டிகளில் ஒருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தாயகம் திரும்பிய அவர் தனது தோழிக்கு ஆறுதலாக இருக்க விடுப்பு கேட்டுள்ளதற்கு பிபிஎல் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்தச் செயலுக்காக பிபிஎல் மற்றும் ஜெமிமாவுக்கு உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது.
இந்தியாவில் இருந்து பிபிஎல் தொடரில் விளையாடும் ஒரே வீராங்கனையாக ஜெமிமா இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.