சதம் விளாசிய மகிழ்ச்சியில் விராட் கோலி படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளில் 52-வது சதம் விளாசி விராட் கோலி அசத்தல்!

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் விராட் கோலி தனது 52-வது சதத்தைப் பதிவு செய்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் விராட் கோலி தனது 52-வது சதத்தைப் பதிவு செய்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று (நவம்பர் 30) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடியாக ரன்கள் குவித்தது.

52-வது சதம் விளாசிய விராட் கோலி

சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 102 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் 52-வது சதம் இதுவாகும்.

சதம் விளாசிய பிறகு விராட் கோலி சிக்ஸர்கள் விளாசி அதிரடியாக ரன்கள் குவித்தார். இருப்பினும், அவர் 120 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து, நண்ட்ரே பர்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்திய அணி 300 ரன்களைக் கடந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Indian batsman Virat Kohli has scored his 52nd century in ODIs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு! - முதல்வர் ஸ்டாலின்

மும்பையில் குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: பாலிவுட் நடிகர் கைது

பதிலுரை அளிக்க வேண்டிய நான், ஆளுநருக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலை! - முதல்வர் பேச்சு

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!

பிராட்வே பேருந்து நிலையம் மறுசீரமைப்பு: இன்று முதல் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து பேருந்து இயக்கம்!

SCROLL FOR NEXT