மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்புவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
129 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 38.3 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரமீம் ஷமீம் 23 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஃபாத்திமா சனா 22 ரன்களும், முனீபா அலி 17 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் ஷோர்னா அக்தர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மரூஃபா அக்தர், நஹிதா அக்தர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், நிஷிதா நிஷி, ஃபஹிமா கட்டூன் மற்றும் ரபேயா கான் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் அணி களமிறங்குகிறது.
இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: கே.எல்.ராகுல் அரைசதம்; வலுவான நிலையில் இந்தியா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.