ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (அக்டோபர் 4) அறிவித்துள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (அக்டோபர் 4) அறிவித்துள்ளது.
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ஷுப்மன் கில் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சாதாரண வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். அணியின் துணைக் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் தொடரில் பணிச்சுமையின் காரணமாக இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்
ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணைக் கேப்டன்), அக்ஷர் படேல், கே.எல்.ராகுல், நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில் (துணைக் கேப்டன்), திலக் வர்மா, நிதீஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்ஷர் படேல், ஜித்தேஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.
இதையும் படிக்க: எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.