கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான ஓடிஐ, டி20 தொடர்: ஆஸி. அணியில் மேக்ஸ்வெல், கம்மின்ஸுக்கு இடமில்லை!

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு ஆஸ்திரேலிய ஒருநாள், டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு ஆஸ்திரேலிய ஒருநாள், டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி பெர்த்தில் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி துவங்குகிறது. ஒருநாள் போட்டிகள் பெர்த், அடிலெய்டு, சிட்னியிலும், டி20 போட்டிகள் கேன்பெரா, மெல்பர்ன் ஆகிய இடங்களிலும் நடைபெறுகிறது.

நீண்ட நாள்களுக்குப் பின்னர், இந்திய அணியின் முன்னணி நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கவுள்ளதால் இந்தத் தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்தத் தொடருக்கான இந்திய அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் பிரதான கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால், ஒருநாள் அணிக்கும், டி20-க்கும் கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இரண்டு மாற்றங்களாக 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியைப் பல போட்டிகளில் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற மார்னஸ் லாபுசேன், மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் மணிக்கட்டில் ஏற்பட்ட எலும்பு முறிவு காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பெறவில்லை. அவர் டிசம்பரில் நடைபெறும் பிக்பாஸ் லீக் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் மீண்டும் இடம்பெற்றுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து காயத்தில் இருந்து விலகியிருந்த கேமரூன் கிரீன் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய டி20 அணி

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குஹ்னேமன், மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.

No Maxwell, Cummins as Australia announce squad vs India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லோகா சாப்டர் 1! ஓடிடியில் எங்கே? எப்போது?

போலி தொழில்நுட்ப சேவை மோசடி: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஏர் இந்தியா விபத்தை சித்திரித்து துர்கா பூஜைக்கு வைக்கப்பட்ட அலங்கார பந்தலால் சர்ச்சை!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி: இபிஎஸ் கண்டனம்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT