முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் தான் ஓய்வு பெற்றது தனிப்பட்ட விஷயம் என்றும் தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் டிராபியில் பாதியிலேயே அஸ்வின் வெளியேறியது சர்ச்சையைக் கிளப்பியது.
தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.அஸ்வின் (39 வயது) இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து கடந்த டிசம்பரில் ஓய்வை அறிவித்தார்.
பிளேயிங் லெவனின் வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஓய்வு பெற்றதாக அப்போது தகவல் மூலம் தெரியவந்தது.
சமீபத்தில் ஐபிஎல் தொடரிலும் ஓய்வை அறிவித்த அவர் பிபிஎல் தொடரில் விளையாடுகிறார்.
இந்நிலையில், தனது யூடியூப் சேனலில் இது குறித்து அஸ்வின் பேசியதாவது:
இந்திய அணியில் இடமில்லை என்றோ ஓய்வு பெற்று விடு என்றோ என்னை யாரும் சொல்லவில்லை.
உண்மையில் நான் ஓய்வு பெறுகிறேன் என்று சொல்லும்போது 2-3 நபர்கள் ’வேண்டாம்; இன்னும் கூடுதலாக விளையாடு’ என்றே கூறினார்கள்.
கேப்டன் ரோஹித் சர்மா, கௌதம் கம்பீரும் மீண்டும் ஒருமுறை யோசி எனவும் கூறினார்கள். ஆனால், எனது ஓய்வு பற்றி அஜித் அகர்கரிடம் பெரிதாக பேசவில்லை.
ஓய்வு பெற்றதில் எனது தனிப்பட்ட முடிவுதான் காரணம். யாரும் வற்புறுத்தவில்லை எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.