முகப்பு
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 12 அக்டோபர், 2025 at 2:07 PM
முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் அகா
பகிர்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் இன்று (அக்டோபர் 12) தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 93 ரன்களில் ஆட்டமிழந்து 7 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஷான் மசூத் அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் செனுரான் முத்துசாமி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ககிசோ ரபாடா, சுப்ராயென் மற்றும் சிமோன் ஹார்மெர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

முகமது ரிஸ்வான் 62 ரன்களுடனும், சல்மான் அகா 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

summary

Pakistan scored 313 runs for the loss of 5 wickets in their first innings at the end of the first day's play in the first Test against South Africa.

முழு கட்டுரையைப் படிக்க →