விராட் கோலி - ரோஹித் சர்மா படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

ரோஹித் சர்மா, விராட் கோலியிடமிருந்து இந்திய அணி எதிர்பார்ப்பதென்ன?

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியிடமிருந்து இந்திய அணி என்ன எதிர்பார்க்கிறது என்பது தொடர்பாக கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியிடமிருந்து இந்திய அணி என்ன எதிர்பார்க்கிறது என்பது தொடர்பாக கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.

இரண்டாவது போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ் ஆட்ட நாயகனகாவும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பல ஆண்டுகளாக பல போட்டிகளை அணிக்காக வென்று கொடுத்துள்ளனர் எனவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர்களிடமிருந்து அதனையே எதிர்பார்க்கிறோம் எனவும் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

இது தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: கடந்த 2-3 ஆண்டுகளாக இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக நினைக்கிறேன். நாங்கள் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கிட்டத்தட்ட ஒரே அணிதான் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

கடந்த காலங்களில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்கள். அவர்கள் இந்திய அணிக்காக கடந்த 10-15 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்கள். இந்திய அணிக்கு பல போட்டிகளை வென்று கொடுத்த அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது. அணியின் கேப்டனாக உள்ள யாரும் இந்த மாதிரியான அனுபவம் வாய்ந்தவர்கள் அணியில் இருக்க வேண்டும் என்றே நினைப்பார்கள். அதனையே நாங்களும் எதிர்பார்க்கிறோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பாக விளையாடி மாயாஜாலம் நிகழ்த்த வேண்டும் என்பதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Captain Shubman Gill has spoken about what the Indian team expects from Rohit Sharma and Virat Kohli.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருளும் அழகே அவள் பார்வையில்... அனு!

ஆஸி. உடனான தோல்வியிலிருந்து இந்தியா வெளியே வரவேண்டும்: மிதாலி ராஜ்

ஹரியாணாவில் மற்றொரு காவல் துறை அதிகாரி தற்கொலை

பத்திரிகையாளர் சந்திப்பில் டீசல் படக்குழுவினர் - புகைப்படங்கள்

உ.பி.யில் கடந்த 8 ஆண்டுகளில் 15,000 என்கவுன்ட்டர்கள்! 256 குற்றவாளிகள் பலி!

SCROLL FOR NEXT