ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள். ap
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளிடம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இந்தத் தொடரில் இன்று நடைபெறும் லீக் சுற்றின் 26-வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் விளையாடி வருகிறது.

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அகீல் கான்.

கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தூருக்கு வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு, மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் கடந்த வியாழக்கிழமை (அக்.23) ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் இருந்து அருகிலுள்ள ஒரு பிரபலமான ஓட்டலுக்கு ஜாகிங் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தேனீர் விடுதிக்குச் செல்ல கஜ்ரானா சாலையில் நடந்து வந்தபோது, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில், கண்காணிப்புக் கேமராக்கள், அருகில் இருந்தவர்கள் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் அகில் கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் தேவ்ஜித் சாய்க்கியா வருத்தம் தெரிவித்துள்ளார்.

Two Australian women cricketers stalked, molested in Indore; accused held

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் பூட்டை உடைத்து பொருள்கள் திருட்டு

அனுமதிச்சீட்டு இல்லாமல் எம். சாண்ட் ஏற்றிச் சென்ற 2 லாரிகள் பறிமுதல்

இரிடியம் மோசடி: மேலும் 27 போ் கைது: சிபிசிஐடி நடவடிக்கை

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்: இதுவரை 6.97 லட்சம் போ் பயன்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT