முகப்பு
கிரிக்கெட்

2-வது அரையிறுதி: இந்தியாவுக்கு 339 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Updated On : 30 அக்டோபர், 2025 at 1:34 PM
சதம் விளாசிய மகிழ்ச்சியில் ஃபோப் லிட்ச்ஃபீல்டு - படம் | AP
பகிர்:

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் நவி மும்பையில் இன்று (அக்டோபர் 30) நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

Advertisement

ஃபோப் லிட்ச்ஃபீல்டு சதம்; 339 ரன்கள் இலக்கு

முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ஃபோப் லிட்ச்ஃபீல்டு சதம் விளாசி அசத்தினார். அவர் 93 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, எல்லிஸ் பெரி 77 ரன்களும் (6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), ஆஷ்லே கார்டன்ர் 63 ரன்களும் (4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தனர். பெத் மூனி 24 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கிராந்தி கௌத், அமன்ஜோத் கௌர் மற்றும் ராதா யாதவ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.

summary

Australia, playing first in the semi-final match against India in the World Cup series, was bowled out for 338 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments