ஆஷஸ் தொடருக்காக ரிஸ்க் எடுக்கத் தயார்: பாட் கம்மின்ஸ்
ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
விரைவில் ஆஷஸ் தொடர் தொடங்கவுள்ள நிலையில், காயம் காரணமாக நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர்களிலிருந்து விலகியுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆஷஸ் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பதாக பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டெஸ்ட் போட்டியில் முழுமையாக விளையாட முடியாது எனத் தெரிந்தால், நான் ஒருபோதும் போட்டியில் விளையாட மாட்டேன். ஆட்டத்தை முழுவதும் விளையாட முடிந்தால் மட்டுமே நான் போட்டியில் இடம்பெறுவேன். வீரர் ஒருவர் சில ரிஸ்க்குகள் எடுத்து முடிந்த வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாட முயற்சிக்க வேண்டும். சில நேரங்களில் பந்துவீச்சாளர்கள் அதிக ஓவர்கள் வீச வேண்டியிருக்கும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அதிக அளவிலான ஓவர்கள் வீச வேண்டியிருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் தொடரின்போது, சில அசௌகரியங்கள் இருந்தன. பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம். ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ரிஸ்க் எடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்றார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 400-க்கும் அதிகமான ஓவர்களை பாட் கம்மின்ஸ் வீசியுள்ளார். ஆனால், இந்த ஆண்டு இதுவரையிலான 9 மாதங்களில் 175.1 ஓவர்கள் மட்டுமே அவர் வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Australian captain Pat Cummins has said that he is willing to take risks to play in the Ashes series.
இதையும் படிக்க: அஸ்வினுக்கு அழைப்பு விடுத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!